இயக்குனர் வெற்றிமாறன் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டு பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார் முதலில் நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் ஆக்சன் மற்றும் காதல் நிறைந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரையும் வெகுவாக கவர்ந்து படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தின் போது வெற்றிமாறன் தனுஷ்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறினார் அதன் பின் இவர்கள் இருவரும் தொடர்ந்து படங்களில் இணைந்தனர் அந்த வகையில் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தனர் இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது அதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அண்மை காலமாக இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் கைகோர்க்காமல் மற்ற நடிகர்களை வளர்த்து விட டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் நடிகர் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை படத்தை உருவாக்கி வருகிறார் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார் இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் படபிடிப்பு முடியாமல் இருக்கிறது அதேபோல சூரியா உடன் ஒரு படம் பண்ண இணைந்தார்.
அந்த படத்திற்கு வாடிவாசல் என பெயர் வைக்கப்பட்டதே படத்தில் எந்த ஒரு காட்சிகளும் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கிய படங்களை பார்த்த தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் எப்படியாவது வெற்றிமாறனுடன் இணைய வேண்டுமென ஆர்வம் காட்டி வந்தார் இதற்காக அவருக்கு நாங்கள் முப்பது கோடி சம்பளம் தருகிறோம் தெலுங்கில் படம் பண்ண வேண்டும் என ஜூனியர் என்டிஆர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுவரை கம்மியான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு 30 கோடி என்பது மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் என்பதால் தற்பொழுது தெலுங்கில் அவர் படம் பண்ண அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நீங்கள் விடுதலை படத்தை எடுக்கவே நேரம் அதிகமாகின்றது எனக்கு அடுத்தடுத்த படங்கள் இருக்கிறது அதனால் வெற்றிமாறனுடன் பேசி வாடிவாசல் படத்தை..
இரண்டு வருடம் கழித்து எடுத்து கொள்ளலாம் என தள்ளி வைத்துவிட்டார் தற்பொழுது வெற்றி மாறன் கையில் இருப்பது விடுதலை படம் தான் அதுவும் இறுதி கட்டடத்தில் இருக்கிறது அதை முடித்துவிட்டு சரியான நேரம் பார்த்து தெலுங்கில் இவர் ஜூனியர் என்டிஆர் வைத்து படம் பண்ணுவது உறுதி 30 கோடிக்கு ஆசைப்பட்டு நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை தள்ளி வைத்தது தற்போது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.