சம்பவம் பண்ண காத்திருக்கும் வெற்றிமாறன்.! முடிந்தது படபிடிப்பு.. இது அதிகாரபூர்வ அறிவிப்பு

vetrimaran
vetrimaran

காமெடி திரைப்படங்களில் நடித்து வந்து தற்பொழுது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களின் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் சூரி. தற்பொழுது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, கௌதமேனன் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.

இந்த திரைப்படம் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது எனவே ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் ஆகும் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். அந்த வகையிலும் தற்பொழுது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சூப்பர் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அதாவது இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமை அடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது என்று தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இந்த படத்திற்கு சூரி ஹீரோவாக இருந்தாலும் இந்த கதையின் ஹீரோ விஜய் சேதுபதி தான் எனக் கூறியிருந்தார். எனவே சமீப காலங்களாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி தொடர்ந்து ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து மிரட்டி வரும் நிலையில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். எனவே விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சூரியும் முதன் முறையாக ஹீரோவாக வலுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.