வெறும் 40 கோடி பட்ஜெட்டில் எட்டு கோடி ரயில் காட்சி.! மிரட்டப் போகும் வெற்றிமாறன்.! யாரும் எதிர்பார்க்காத தகவல்..

viduthalai
viduthalai

தமிழ் சினிமாவில் பல வெற்றி இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களின் லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் வெற்றிமாறன். அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி என்றே கூற வேண்டும். அந்த அளவு வசூலில் கல்லா கட்டியது அது மட்டும் இல்லாமல் விருதுகளையும் வாரி குவித்தது இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்பொழுது விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் படத்தின் முதல் பாகம் முடிவடைந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் முதன் முதலில் வெறும் 4 கோடி ரூபாயில் தான் தொடங்கப்பட்டது ஆனால் தற்பொழுது வரை 40 கோடிக்கும் அதிகமாக செலவாகிவிட்டது என தகவல் கிடைத்துள்ளது மேலும் விடுதலை திரைப்படம் காவல்துறையினர் பயிற்சி பெறும் பொழுது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த கதை அம்சம் கொண்ட திரைப்படம்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக எட்டுக்கோடி ரூபாய் செலவு செய்து ரயில் விபத்து காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் அடுத்த மாதம் இந்த காட்சி படமாக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது மும்பரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக விடுதலை திரைப்படம் குறித்த பட்ஜெட்டை விட இரண்டு மடங்காக போனாலும் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெற்றி மாறன் விடுதலை திரைப்படத்தை முடித்த பிறகு வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அந்த திரைப்படத்தில் சூர்யா அவர்கள் நடிக்க இருக்கிறார் அதற்காக சமீபத்தில் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டு அதன் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.