சினிமாவில் தடுமாறும் சூர்யாவை தட்டி தூக்கிவிட போகும் வெற்றிமாறன்.! பிச்சிகிட்டு பறக்கும் வாடிவாசல் பிஸ்னஸ்..! பிரபலம் கூறிய அதிரடி தகவல்

vetrimaran vaadivaasal
vetrimaran vaadivaasal

சூர்யா தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறார் இந்த நிலையில் எப்படியாவது இதிலிருந்து மீள வேண்டும் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது முதன் முதலாக சூர்யா வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது இந்த படத்திற்கு வாடிவாசல் எனப் பெயர் பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெஸ்ட் படப்பிடிப்பு நடத்தப்பட்டது அதில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் என பலரும் கலந்து கொண்டார்கள் மேலும் வாடிவாசல் திரைப்படத்திற்காக பல காளைகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் சூர்யா காளைகளுடன் நேரடியாக மோத இருப்பதால் அதற்காக  பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். அதனால் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாடி வாசல்  படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

மேலும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் ஜிவி பிரகாஷ் வாடிவாசல் திரைப்படத்தின் இசை ஆல்பத்தை பெரும் தொகை கொடுத்து வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இன்னும் பாடல் கம்போஸ் செய்து முடிக்காத நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் இசை ஆல்பத்தை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் சூர்யாவின் வாடி வாசல் திரைப்படம் சூர்யாவுக்கு  வெற்றித் திரைப்படமாக அமையும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் திரைப்படத்தின் பிசினஸ் படப்பிடிப்புக்கு முன்பே தொடங்கியதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கும் பல திரைப்படங்கள் வெற்றித் திரைப்படங்களை அமைந்துள்ளதால் இந்த திரைப்படமும் சூர்யாவுக்கு நல்ல வெற்றித் திரைப்படமாக அமையும் என பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.