கிடைத்த விஜய் பட வாய்ப்பை உதறித் தள்ளிய வெற்றிமாறன்.! காரணம் என்ன தெரியுமா.?

vetri-maran
vetri-maran

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

விஜய்யின் தளபதி 65 திரைப்படத்தை முருகதாஸ் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் கசிந்தது ஆனால் திடீரென அவர் விலகி விட்டார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முருகதாஸ் சமீபகாலமாக தோல்வி திரைப்படங்களை கொடுத்து வருவதால் விஜய் அவருக்கு தளபதி 65 திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார், ஆனால் முருகதாஸ் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அரைத்த மாவையே அரைப்பது போல் கதை கூறியுள்ளார்.

அதனால் கடுப்பான விஜய் இணைந்து பணியாற்றாமல் அவரை ஒதுக்கி விட்டாராம், இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளது ஆனால் வெற்றிமாறன் தற்பொழுது சூரி திரைப்படத்தை இயக்கி வருகிறார் அதுமட்டுமிலலாமல் சூரி படத்தை முடித்துவிட்டு தனுஷ் திரைப்படத்தையும் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார் அதனால் இந்த அனைத்தையும் முடிந்த பிறகுதான் விஜய் படம் என கூறிவிட்டாராம்.

அதனால் விஜய்க்கு நன்றி கூறி  விடை பெற்றுக் கொண்டாராம் வெற்றிமாறன், அதனால் அட்லி தளபதி 65 திரைப் படத்தை இயக்கும் வாய்ப்பை துண்டு போட்ட பிடிக்க காத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.