விஜயை சந்தித்து நான் சொன்ன கதை இதுதான்.? ரகசியத்தை பகிர்ந்த வெற்றிமாறன்

vijay

நடிகர் விஜய் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் பிரசாந்த் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் முழுக்க முழுக்க பக்கா ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் மேலும் இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, சூர்யா போன்றவர்களும்..

நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100 வது படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது இந்த படத்தை அட்லீ அல்லது தெலுங்கு இயக்குனர் கோபி சந்த் மல்லினேனி இயக்க உள்ளதாக கூறப்பட்டு..

வந்த நிலையில் விஜய்யை சந்தித்து வெற்றிமாறன் ஒரு கதையை கூறி இருக்கிறார். இருவரும் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து வெற்றி மாறன் கூறியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் பூவே உனக்காக, லவ் டுடே படங்களை முடித்த பிறகு விஜயை சந்தித்து ஒரு கதை சொன்னேன் கிட்டத்தட்ட அது நண்பன் படத்தின் கதை போன்று தான்.. அது அவருக்கான கதை கிடையாது ஆனால் அந்த கதையில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறினார்.