தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை தந்து வரும் நிலையில் தற்போது இவருடைய இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இருக்கும் நிலையில் தற்பொழுது முதல் பாகம் வருகின்ற 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எனவே தற்பொழுது இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்திருக்கும் நிலையில் சென்சார் பணிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இதில் சூரி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இவ்வாறு விடுதலை திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் சூரி இந்த படம் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கு இல்லாத பாம்புகள், பூச்சிகளை கிடையாது எனவும் கூறினார். இவ்வாறு ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் நிலையில் விடுதலைப் படம் ரிலீஸ் ஆகுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்பொழுது திடீரென இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த படத்தின் டப்பிங்கில் அவர் சில கரெக்ஷன் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய படங்கள் அனைத்தும் மிகவும் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் உடையவர் அதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் கூட டப்பிங் கலைஞர்களை வரவழைத்து சில மாற்றங்களை செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜு மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்வாறு இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.