தமிழ் சினிமாவில் பல்வேறு சிறந்த இயக்குனர்கள் இருக்கின்றனர் அந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படங்களை எடுத்து அசத்தி வருகிறார். இவர் தனுசுடன் கைகோர்த்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களுமே வெற்றி படங்கள் தான். அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் அடங்கும்.
மீண்டும் இவர்கள் இருவரும் இணைய வேண்டுமென ரசிகர்கள் ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் ஆனால் தற்பொழுது வெற்றி மாறன் புதிய நடிகர்களுடன் கைகோர்க்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் விஜய் சேதுபதி சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படுகிறது.
முதல் பாகம் காடு மற்றும் மலைகள் சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இதில் பழங்குடியினருக்கும், போலீசாருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கும் ஒரு படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. விடுதலை படத்தின் இறுதி கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன இந்த வருடம் இறுதியில் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றி மாறன் சூர்யா உடன் கைகோர்த்து வாடிவாசல் படத்தை எடுக்க உள்ளார். அதனை முடித்துவிட்டு விஜயை வைத்து ஒரு படம் பண்ணுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார் ஆனால் தற்பொழுது நடக்காதது போல் தெரிய வந்துள்ளது. காரணம் நம்ம தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்பொழுது வெற்றி மாறன் கலந்து கொண்டார் அவரிடம் வடசென்னை 2 படம் எப்பொழுது உருவாகும் என ரசிகர்கள் கேட்டனர். பதில் அளித்த வெற்றிமாறன் விடுதலை மற்றும் வாடிவாசல் படம் முடிந்த உடனேயே அடுத்தது வடசென்னை 2 என தெளிவாக கூறியுள்ளார். இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் ரொம்பவும் அப்செட் ஆகினர். மேலும் நீங்கள் விஜய் உடன் இணைவது இப்பொழுது நடக்காதது போல் தெரிகிறது எனவும் மனதிற்குள் சொல்லி புலம்பி வருகின்றனர்.