விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல், டிஎஸ்பி போன்ற படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அதில் முதலாவதாக எதிர்பார்க்கும் திரைப்படம் விடுதலை. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது முதல் பாகம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர். நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது மேலும் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் நடந்தது. அதில் படத்தில் நடித்த பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது விடுதலை படம் குறித்தும், வெற்றிமாறன் குறித்தும் விஜய் சேதுபதி பேசியிருந்தார் அதில் அவர் சொன்னது.. நடிகர் சூரியின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.அவருடைய பேச்சை கேட்டு நான் மயங்கி விட்டேன் 8 நாள் இந்த படத்துல நடிக்க வாங்கன்னு கூட்டிட்டு போய் என்னை ஏமாற்றியவர் தான் வெற்றிமாறன் நான் வடசென்னையில் நடிக்க வேண்டியது மிஸ் பண்ணி விட்டேன் என கூறினார்.
மேலும் பேசிய அவர் ரசிகர்கள் வடசென்னை பார்ட் 2 எப்பொழுது என கேட்க வெற்றிமாறன் இப்போ தான் அதற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமாக வந்துரும் என கூறினார் விஜய் சேதுபதி. யார் யாரோ யூட்யூபில் ஏதேதோ சொல்றாங்க நானும் சொல்லி வைக்கிறேன் சார் என்று விஜய் சேதுபதி சொன்னதும் வெற்றிமாறன் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
தொடர்ந்து பேசுகையில் வடசென்னை படத்தை மிஸ் பண்ணிடோமே என்கின்ற வருத்தத்தால் நான் அந்த படத்தை இதுவரை பார்க்கவே இல்லை விடுதலை படத்திற்காக முதலில் 8 நாட்கள் என்னிடம் கால்ஷீட் கேட்ட வெற்றிமாறன் கடம்பூர் அருகே ஒரு காட்டுப் பகுதியில் வைத்து சூட்டிங் எடுத்தார். அப்புறம்தான் எனக்கு தெரிந்தது எட்டு நாளும் எனக்கு ஆடிஷன் தான் என்று..
வெற்றிமாறன் மிகவும் பொறுப்பான இயக்குனர் ஆடுகளம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்த பொழுது இங்கு ஆடியன்ஸாக உட்கார்ந்து இருந்த நான் இன்று அதே மேடையில் வெற்றிமாறனுடன் உட்கார்ந்திருப்பது அவ்வளவு சந்தோஷமாக உள்ளது தயவு செய்து இளையராஜா பேசும் பொழுது யாரும் கத்தாதிங்க என கூறிய தனது பேச்சை முடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி.