அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. லியோ குறித்து போர்டு வைத்ததால் ஈ ஓட்டும் வெற்றி திரையரங்கம்.!

Vetri theatre leo movie
Vetri theatre leo movie

Vetri theatre leo movie : நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் பல வருடங்களுக்கு பிறகு  மீண்டும் திரிஷா இணைந்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மன்சூர் அலிகான், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் மேலும் லியோ திரைப்படத்தில் கேமியா ரோலில் ஒரு சில நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் ஆனால் அது குறித்து லோகேஷ் கனகராஜ் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

ICC RANKING : விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா.. முதல் இரண்டு இடத்தில் யார் தெரியுமா.?

கேமியோ  ரோலில் யார் நடிக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால் படத்தின் சுவாரசியம் குறைந்துவிடும் அதனால் அமைதி காத்து வருகிறார். லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது ஏற்கனவே ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் புக்கிங் கிடையாது என போர்டு வைத்தார்கள்.

ஏனென்றால் அவர்கள் வைத்த கோரிக்கை இதுவரை ஒத்துவரவில்லை அதேபோல் சென்னையில் பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கம் குரோம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த திரையரங்க உரிமையாளர் திடீரென ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி பாஸ் நுழைய முடியும்.. சிவகார்த்திகேயன்- மோனிகா குறித்து உண்மையை போட்டு உடைத்த பிரபலம் .!

அதில் அவர் கூறியதாவது நாங்கள் லியோ திரைப்படத்திற்கு இன்னும் ஒப்பந்தம் போடவில்லை எனக் கூறியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் திரையரங்கில் இன்று லியோ புக்கிங் கிடையாது என போர்டு வைத்துள்ளார்கள் இதனால் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

நாளை லியோ திரைப்படம் வெளியாகுமா வெளியாகாதா வெற்றி திரையரங்கில் என குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள் இது குறித்து திரையரங்கம் ஏதாவது ஒரு தெளிவான முடிவை வெளியிட வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.