வெற்றிமாறன் திரைப்படத்திற்காக மிரட்டலான கெட்டப்பில் சூரி.? புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.!

soori
soori

soori Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவர் முதன் முதலில் திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு முழு நேர காமெடியனாக தன்னுடைய திறமையால் உயர்ந்து நிற்கிறார். மேலும் சூரி முன்னணி நடிகர்களுடன் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் சூரி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் உள்ளார்கள் இந்த புதிய கெட்டப் வெற்றிமாறன் திரைப்படத்திற்காகவா என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

soori
soori

நடிகர் பரோட்டா சூரி கொரோனா ஊரடங்கால் தன்னுடைய சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்திற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார், இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய கருப்பன் காளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.

soori
soori

அதுமட்டுமில்லாமல் வெள்ளை சட்டை கருப்பு வேட்டி அணிந்து வித்தியாசமான கெட்டப்பில் தன்னுடைய புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் கேப்ஸனாக ‘கொரோனாவை வெல்வோம் தரமாக வாழ்வோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார் அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் உள்ளார்கள்.

soori
soori

மேலும் சூரி இதற்குமுன் சீமராஜா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேபோல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெற்றிமாறன் திரைப்படத்திற்கான கெட்டப்பா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்தளவு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் சூரி.

soori
soori