சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றதோடு மட்டுமில்லாமல் தேசிய விருதையும் பெற்று தனக்கான அங்கீகாரமான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்பட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது டாப் நடிகர்கள் இவரை தட்டி தூக்கி வருகின்றனர் அந்த வகையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் தற்போது “விடுதலை” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
அந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர காத்திருக்கிறது. அதன்பிறகு வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை எடுக்க உள்ளார் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்த கூட்டணியை முதல்முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் தளபதி விஜயுடன் இணைவார் என்று சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு பட்டு பரவி வந்தன.
ஆனால் உண்மையில் தளபதி விஜயுடன் வெற்றிமாறன் இணையவில்லை என்பது தான் உண்மைச் செய்தி. ஏற்கனவே கமலை சந்தித்து நாவல் ஒரு கதையை எடுத்துக் கூறியிருந்தார் அந்தக் கதை கமலுக்கு மிகவும் பிடித்து போக ஒரு கட்டத்தில் வெகுவிரைவிலேயே நாம் இணைவோம் என கூறப்பட்டது. அதற்காக தற்போது முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்தார் மேலும் தற்போது நடக்கின்ற சூழலில் கமலுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தல், பிக்பாஸ், விக்ரம் போன்றவற்றை முடித்த கையோடு கமல் வெற்றிமாறன் நிச்சயம் இணைந்து பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளார். இச்செய்தி இணைய தளபக்கத்தில் தீயாய் பரவி வருகிறது மேலும் விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.