Surya : நடிகர் சூர்யா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விக்ரம் படத்தில் ரோலாக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். அடுத்து இவர் நடித்த எதற்கும் துணிந்தவன். ஜெய் பீம் போன்ற படங்கள் வெற்றி பெற்றது தொடர்ந்து கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் வெற்றி நடை கொண்டு வரும் சூர்யாவை தூக்கி விட்டவர்களில் ஒருவர் அமீர்..
இவர் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமான படம் மௌனம் பேசியதே இந்த படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்திருந்தார் படம் வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு இருவரும் நல்ல பழக்கம் ஏற்பட்டு நல்ல உறவில் இருந்து வந்துள்ளனர் ஆனால் அமீருக்கும் சூர்யா குடும்பத்திற்கு மட்டும் சில மனக்கசப்பு இருந்தது.
தமிழை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த மேகனா.! திருமணமான உண்மையை கூறும் சரஸ்வதி..
காரணம் பருத்திவீரன் படம் தான் அது பெரியதாக வெடிக்க சூர்யா ஒரு கட்டத்தில் அமீரை தவறாக புரிந்து கொண்டார் அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை.. ஆனால் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவதால் அந்தப் படத்தில் வெற்றிமாறன் அமீரை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்து சூர்யாவிடம் கூறியுள்ளார்.
ஆனால் சூர்யாவோ ஒரு நாள் வெற்றி மாறனிடம் அமீர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்தால் நன்றாக இருக்கும் நல்ல மார்க்கெட் இருக்கும் என கூறி இருக்கிறார். அமிரை கழட்டி விட சூர்யா இப்படி சொல்லி இருப்பதை தெரிந்து கொண்ட வெற்றிமாறன் அதைக் கேட்டு கடுப்பாகி என் கதையில் யார் நடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்..
இஷ்டம் இருந்தா நடிங்க இல்லனா விலகி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம் ஆனால் அமீர் அந்த படத்தில் நடிப்பதை விரும்பாத சூர்யா தற்போது அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளப் போகிறார் என செய்திகள் கசிந்துள்ளது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை ஆனால் சூர்யா விலகினாலும் வாடிவாசல் படத்தை எடுப்பது உறுதி அந்த படத்தில் முக்கியமாக அமீரை நடிப்பவை பார்.