இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும், இவர் இயக்கிய திரைப்படம் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அதுவும் அசுரன் திரைப்படம் பல விருதுகளை வாங்கியது இந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்கு அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் நடிகர் சூரியுடன் ஒரு திரைப்படத்தில் இணைய இருக்கிறார் வெற்றிமாறன், இந்தநிலையில் வெற்றிமாறனும் விஜய்யும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய இருப்பதாக கிசுகிசுப்பு கிளம்பிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் இவர்களின் அடுத்த திரைப்படம் முடிந்த பிறகு இந்த கூட்டணி அமையும் என கூறப்படுகிறது, மேலும் விஜய் இந்த திரைப்படத்திற்காக 150 நாள் கால்ஷீட்டை ஒதுக்கி இருப்பதாகவும், அந்த வருடத்தில் விஜய் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் இந்த நிலையில் விஜய் இணைந்துள்ளது ரசிகர்களிடம் மேலும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஊரடங்கும் முடிந்ததும் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.