ரஜினிக்காக பார்த்து பார்த்து ஒரு கதையை உருவாக்கிய வெற்றிமாறன் – கடைசியில் “நோ” சொன்ன சூப்பர் ஸ்டார்..! ஏன் தெரியுமா.?

rajini
rajini

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் இன்னொரு படத்தை கொடுக்க.. விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் கதை பெரிது என்பதால் இதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

விடுதலை படம் முழுக்க முழுக்க ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, காமெடி நடிகர் சூரி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஒரு பொதுவுடமைவாத போராளிக்கும் அவரை என்கவுண்டர் செய்ய போகும் போலீசுக்கும் இடையே நடக்கும்..

உரையாடலையே இந்த சிறுகதை இதனை திரைப்படத்திற்கு ஏற்றார் போல திரைக்கதை அமைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் இரண்டு வருடமாக நடைபெற்று வருகிறது இதுவரை முடிவுக்கு வரவில்லை.. அதேசமயம் இந்த படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்கிற தேதியும் படக்குழு இதுவரை வெளியே சொல்லவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசி உள்ளார். நான் கூறிய கதையில் பாலிட்டிக்ஸ் அதிகமாக இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இதனை பண்ண முடியாது எனக் கூறினார். Shoes of the death என்ற நாவலை அடிப்படையாக வைத்த தான் ஒரு கதையை தயார் செய்தேன்..

அந்த கதை விவசாயிகளின் தற்கொலையை அடிப்படையாக வைத்து எழுதிய கதை இதுபோன்ற ஒரு விஷயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் தான் அவரிடம் அந்த கதையை சொன்னேன் என கூறினார்.