சிறந்த படைப்பாளி என பலராலும் போற்றப்படுபவர் இயக்குனர் வெற்றி மாறன். இவர் பெரும்பாலும் உண்மை மற்றும் வரலாற்று கதைகளில் இருந்து கதையை உருவாக்குகிறார் அதனால் என்னவோ வெற்றிமாறனின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகின்றன.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த அசுரன், பாவக்கதைகள் போன்றவை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் இரண்டு பாகங்களாக வெளியிட இருக்கிறார்.
முதல் பாகம் வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் மிகப்பெரிய ஒரு கதையை இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளார். அந்த படத்தில் இரண்டு டாப் ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
இந்த இரண்டு நடிகர்களில் ஒருவர் தெலுங்கு டாப் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் எனவும் மற்றொரு டாப் பிரபலம் நடிகர் தனுஷ் எனவும் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர், இரண்டாவது பாகத்தில் தனுஷ் நடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் முதல் முறை நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு பேருமே நடிப்பு அரக்கன் தான்.. இதனால் போட்டி போட்டு நடிகர்கள். வெகு விரைவில் இதற்கான அதிகாரப் பூர்வமான அறிவிப்பை படகுழு அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் நிச்சயம் இந்த திரைப்படம் RRR போன்று மிகப் பெரிய அளவில் பேசப்படும் என சொல்லி வருகின்றனர்.