தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டு இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் தற்போது காமெடி நடிகரான சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விடுதலை திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இந்த படத்திற்கான பயிற்சி சூட்டிங் முடிவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்குனர் மட்டுமல்லாமல் சில நல்ல படங்களையும் தயாரித்து வருகிறார்.
அப்படி இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட்டைக்காளி வெப் சீரியஸ் நல்ல வெற்றி பெற்று வருகிறது. இந்தப் பேட்டைக்காளியும், வாடிவாசலும் ஒரே கதை தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு பேட்டியில் இது குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது பேட்டைகாளி திரைப்படம் வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதால் இந்த இரண்டு படத்தின் கதை ஒரே கதை தான் என்று கூறியிருந்தனர் அவருக்கு தெளிவாக விளக்கவும் அளித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் அதாவது பேட்டை காளி படம் தற்போது காலகட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.
ஆனால் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் 60 காலகட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகப் போகும் திரைப்படம். இந்த இரண்டு படத்தின் கதை வெவ்வேறு கதை தான் என்று வெற்றிமாறன் அவர்கள் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். மேலும் சூர்யா அவர்கள் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வெப் சீரியஸில் ஓடிக்கொண்டிருக்கும் பேட்டைகாலி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.