“தங்க காசு” கொடுத்து படக்குழுவினரை சந்தோஷப்படுத்திய வெற்றிமாறன்.. வைரலாகும் வீடியோ

viduthalai
viduthalai

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் கடைசியாக எடுத்த அசுரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க சூரி, விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து விடுதலை என்னும் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் கடந்த மாதம் 31ம் தேதி வெளியானது. படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தான் படம் பெரிய அளவில் கூற வருகிறது. விடுதலை படம் விறுவிறுப்புவுக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக இருப்பதால் சினிமா பிரபலங்கள் தொடங்கிய ரசிகர்கள் வரை பலரும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்தனர்.

அதனால் அடுத்தடுத்த நாளில் விடுதலை படத்தை பார்க்க மக்களும் போட்டி போட்டுக்கொண்டு  ஆர்வம்பார்க்கின்றனர். அதன் விளைவாக விடுதலை படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு நாளில் 13 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த திரைப்படம் தற்பொழுது 3 நாள் முடிவில் சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது என கூறப்படுகிறது இதனால் சந்தோஷத்தில் படக்குழுவும்,  வெற்றிமாறனும் செம்ம சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார். விடுதலை படத்தை எடுக்க வெற்றிமாறன் மற்றும் நடிகர்கள் எவ்வளவு மெனக்கெட்டனர்களோ அதே அளவிற்கு உதவி இயக்குனர்களும் கஷ்டப்பட்டனர்..

அதை கருத்தில் கொண்டு வெற்றிமாறன் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு இடத்தில் 25 உதவிய இயக்குனர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் வாங்கி தந்துள்ளார் அது செய்தி பெரிய அளவில் வெளியாகி அதை தொடர்ந்து தற்பொழுது படக்குழுவினருக்கு தங்க காசு கொடுத்து இருக்கிறார். அதன் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா பக்கம் காட்டுதீ போல பரவி வருகிறது.