ஒருவழியாக விடுதலை படத்தின் ரிலீஸ் தேதியை லீக் செய்த வெற்றிமாறன்.!

viduthalai
viduthalai

இயக்குனர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவில் இதுவரை தோல்வியே சந்திக்காத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றி மாறன் இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை, அசுரன், வட சென்னை ஆகிய திரைபடங்களை இயக்கி உள்ளார்.

அசுரனுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் விடுதலை இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட பணியிகல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் முதல்  பாகம் முடிவடைந்து விட்டதாகவும் இரண்டாவது பாகம் தற்போது இறுதி கட்டப்பிடிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் தகவல் அறியாகி உள்ளது.

இந்த நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்பட திட்டம் தீட்டியுள்ளதாக மேலும் இது குறித்து அறிவிப்பு தயாரிப்புத்தலை வீட்டிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசுரன் திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் திரைப்படம் வெளியாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விடுதலை படத்தில் சூரி விஜய் சேதுபதி பிரகாஷ்ராஜ் கௌதம் மேனன் ராஜி மேனன் பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் அசுரன் படத்திற்கு பிறகு நீண்ட நாள்  கழித்து வெற்றிமாறனின் படம் வெளியாவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.