விடுதலை படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்ட “உதவி இயக்குனருக்கு” விலை உயர்ந்த பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போகும்

viduthalai
viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அசுரன் படத்தை தொடர்ந்து விடுதலை திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பெருமாள் வாத்தியராக விஜய் சேதுபதியும், போலீசாக சூரி நடித்துள்ளனர். படம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக வெளியாகியுள்ளது.

படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை படமாக எடுத்துள்ளனர் நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது சமீபத்தில் கூட விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் போன்றவை வெளிவந்ததை தொடர்ந்து மேக்கிங் வீடியோ வெளிவந்தது அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி விடுதலை படத்தில் நடிக்கும் போது பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

மேலும் காடுகளில் ஷூட்டிங் நடைபெறும் போது பூச்சி தொல்லைகள், பாம்பு தொல்லைகள் இருந்தன ரொம்ப மெனக்கெட்டு தான் இந்த படம் உருவாகியது என கூறினார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்கு எவ்வளவு கஷ்டப்பட்டாரோ..

அதேபோல அவருக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய 25 பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வெற்றிமாறன் தன்னுடன் உதவிய இயக்குனராக பணிபுரிந்த 25 பேருக்கு செங்கல்பட்டில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் ஆளுக்கு தல ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக கொடுத்துள்ளாராம் மேலும் அந்த இடத்தில் விவசாயம் அல்லது வீடு கட்டுங்கள் என்று வெற்றிமாறன் அறிவுத்துள்ளார்.

இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் எந்த ஒரு திரை உலக இயக்குனரும் இதுபோன்றது செய்யவே இல்லை நீங்கள் செய்தது மிகப்பெரிய விஷயம் எனக் கூறி வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் நிச்சயம் விடுதலை படம் ஹிட் அடிக்கும் எனவும் கூறி வருகின்றனர்.