வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மூத்த நடிகர் – யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போவீங்க..

vijay
vijay

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  பீஸ்ட் படம்  கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது. அதை சரி கட்ட தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைக்கோர்த்து 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்சை கவரும் திரைப்படமாக இருக்கும் என படக்குழு நம்பி இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல இந்த படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு, ஷாம்..

ஸ்ரீகாந்த், ராஷ்மிகா மந்தனா  என மிகப் பெரிய ஒரு திரை பட்டாளமே நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படம் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். இயக்குனர் வம்சி வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க வைக்க பல நடிகர்களை பார்த்து சந்தித்துள்ளார் அவர்களில் ஒருவராக நடிகர் மைக் மோகனை சந்தித்து விஜய்க்கு அண்ணனாக நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக பிறகு அவருக்கு பதில் வேறு ஒருவரை வாரிசு திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். மைக் மோகன் வாரிசு திரைப்படத்தை தவற விட்டிருந்தாலும் தற்போது அவர் ஹரா என்னும் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.