ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. எனவே பலரும் ரோபோ சங்கரை சோசியல் மீடியாவில் திட்டி சேர்த்து வருகிறார்கள். ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் பாட்னர் திரைப்படத்தில் ஹன்சிகா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், ரோபோ சங்கர், ஜான்விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தினை மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்திருக்கும் நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்ட நிலையில் அப்பொழுது பேசிய ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. அதாவது அதில், ஹன்சிகா மோத்வானி உண்மையிலேயே ஒரு மெழுகு பொம்மை மைதா மாவை உருட்டி செவுத்துல அடிச்சா ஒட்டிக்கொள்ளும் அந்த மாதிரி தான் அவங்க இருப்பாங்க என்றார். மேலும் படத்தில் நான் ஹன்சிகாவின் காலை முட்டிக்கு கீழ தடவுவது போல ஒரு சீன் வரும் ஆனால் அந்த காட்சிக்கு ஹன்சிகா ஒத்துக் கொள்ளவே இல்லை நானும் இயக்குனரும் காலில் விழுந்து கூட கெஞ்சினோம் கட்டைவிரலாவது தடவிக்கிறோம் என்று கேட்டோம் ஆனா முடியவே முடியாது ஹீரோ ஆதி மட்டும்தான் என்னை தொட்டு நடிக்கணும் வேறு யாரும் தொடக்கூடாது என சொல்லிட்டாங்க அப்பொழுதுதான் நினைச்சேன் ஹீரோ ஹீரோ தான் காமெடியன் ஓரமா தான் என்று பேசியிருந்தார்.
இதனால் கடுப்பான பத்திரிக்கையாளர் ரோபோ சங்கரை சபை நாகரிகமே இல்லாமல் ஹன்சிகா மோத்வானியின் காலை தடவ வேண்டும் என்று இத்தனை பேர் முன்னிலையில் பேசியிருக்கிறார். அதுபோன்ற நடிகர்களால் சமூக வலைத்தளத்தில் நடிகை பற்றி தவறாக பேசப்படுகிறது தயவுசெய்து இது போன்று அநாகரீகமான நபரை மேடையில் பேச அனுமதிக்காதீர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நேரத்தில் அங்கு ரோபோ சங்கர் இல்லை எனவே மேடையில் இருந்த ஜான்விஜய் ரோபோ சங்கர் பேசியதற்கு படக்குழுவின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அவர் படத்தின் ஒரு காட்சியை பற்றி பேசுவதாக நினைத்து தவறாக பேசி விட்டார் என கூறியதால் நிகழ்ச்சியே நெகட்டிவாக மாறியது.