கரடுமுரடான பங்களாவில் படமாக்கப்படும் வெந்து தணிந்தது காடு..! ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த கௌதம் மேனன்..!

simbu-1
simbu-1

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் கௌதம் மேனன் இவர் தற்சமயம் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்கவுள்ளார்.

நடிகர் சிம்பு ஏற்கனவே கௌதம் மேனன் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகிய இருவருடன் இணைந்து விண்ணை தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா  பல்வேறு திரைப்படத்தில் நடித்து மாபெரும் கேட்டு கொடுத்துள்ளார் அந்த வகையில் இத்தனை படமும் மாபெரும் வெற்றி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மாநாடு திரைப்படத்திற்கு அடுத்ததாக சிம்பு நடிக்கும் திரைப்படம் என்றால் அது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம்தான்.

மேலும் இந்த திரைப்படத்தில் கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் முதல்முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இவர் ஏற்கனவே நான் கடவுள் அங்காடி தெரு பாபநாசம் சர்க்கார் பொன்னியின் செல்வன் விடுதலை இந்தியன்-2 ஆகிய திரைப்படங்களில் வசனம் திரைக்கதை எழுதியுள்ளார்.

simbu-2
simbu-2

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்புதான் திருச்செந்தூரில் மிகப்பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டன.

simbu-3
simbu-3

மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டை இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.