வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்.! நான் வந்துட்டேன்னு சொல்லு வேற லெவலில் மாஸ் காட்டிய சிம்பு…

venthu-thaninthathu-kaadu
venthu-thaninthathu-kaadu

கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது  காடு இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார், படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமாக கௌதம் மேனன் காதல் கதையை மயமாக வைத்து தான் திரைப்படத்தை இயக்கி வந்தார் ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த திரைப்படம் கேங்ஸடார் திரைப்படமாக உருவாகியுள்ளது அது மட்டும் இல்லாமல் சிம்பு புதுவித தோற்றத்துடன் இருக்கிறார் ஏ ஆர் ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை.

சிம்பு தந்தை இல்லாமல் தன்னுடைய தாய் மற்றும் சகோதரி ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் காட்டுக்காக வேலைக்கு சென்று வருவார் சிம்பு. அப்படி காட்டிற்காக வேலைக்கு சென்ற சிம்பு  ஒரு காலகட்டத்தில் காடு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது அந்த தீயில் சிம்புவும் மாட்டிக் கொள்கிறார் ஒரு வழியாக தீக்காயங்களுடன் அந்த தீயில் இருந்து சிம்பு தப்பித்து வீடு வந்து சேர்கிறார் ஆனால் காட்டை கொளுத்தியது சிம்பு தான் என காட்டின் முதலாளி சிம்புவை பார்த்து நஷ்ட ஈடு தர வேண்டுமென பணம் கேட்கிறார்.

ஆனால் சிம்பு இதை நான் செய்யவில்லை பணம் எல்லாம் தர முடியாது எனக் கூறுகிறார். கோவத்தின் உச்சத்திற்கு போன சிம்பு முதலாளியை பார்த்து இங்கிருந்து கிளம்பி விடு இல்லை என்றால் உன்னை கொன்று தீர்த்து விடுவேன் என கூறுகிறார் இதை கண்டு சிம்புவின் அம்மா பதறுகிறார். அதற்குக் காரணம் சிம்புவின் ஜாதகத்தில் உங்கள் மகன் கொலை செய்வான் என ஜோசியக்காரர் கூறிவிடுவார் அதனால் தான் சிம்புவின் அம்மா பயந்து நடுங்குகிறார்.

அதன் பிறகு சிம்புவை இங்கே வைத்திருந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் நாம் எது நடக்க கூடாது என எதிர்பார்த்துக் கொண்டிருக்குமோ அது நடந்து விடும் என பதட்டத்துடன் இருக்கிறார். உடனே சிம்புவின் அம்மா சிம்புவை மும்பைக்கு அனுப்புவதற்காக சிம்புவின் மாமாவின் உதவியுடன் முற்படுகிறார். அன்று இரவு மாமாவின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் சிம்பு உடனே சிம்புவின் மாமா இந்த லெட்டரை போஸ்ட் செய்து விட்டு வா என பதற்றத்துடன் கூறுகிறார் சிம்புவும் அந்த லெட்டரை போஸ்ட் செய்யப் போகிறார்.

லேட்டறை போஸ்ட் செய்து விட்டு வந்த சிம்புவிற்கு பெருமை அதிர்ச்சி தான் காத்துக் கொண்டிருந்தது சிம்புவின் மாமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பிறகு சிம்பு மும்பை செல்கிறார் ஆனால் மாமாவின் துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் மும்பையில் ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு செல்கிறார்.

அந்த ஹோட்டலில் சமையல் அனைத்து கலைகளையும் கற்றுக்கொண்டு தனது வேலையை பார்த்து வருகிறார். அப்படியே தனது காதல் வலையையும் வீசுகிறார் ஹீரோயினை காதலிக்க ஆரம்பித்த சிம்புவிற்கு அடுத்த பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதாவது  வேலை பார்த்து வந்த ஹோட்டல் ஹோட்டல் மற்றும் அல்ல அது ஒரு கேங்ஸ்டர் இடம். அங்க கொலைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும் இதைத் தெரிந்து கொண்ட சிம்பு அங்கிருந்து கிளம்பி விடலாம் என கிளம்புகிறார்.

ஆனால் எதிர் கேங்ஸ்டர் ஹோட்டலை சுற்றி வளைக்கிறார்கள் நிறைய பேர் வந்ததால் சிம்பு அவர்களிடம் போராடி பார்க்கிறார் அடித்துப் பார்க்கிறார் ஆனால் அதிக பேர் வந்ததால் சிம்பு தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஒவ்வொருத்தராக சுட்டு தள்ளுகிறார். தனது வாழ்க்கையில் எது நடக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே இருந்தாரோ அது நடந்து விட்டது சம்பவத்திற்கு பிறகு சிம்பு எப்படி எதிர்கொள்கிறார் அதிலிருந்து எப்படி மீள போகிறார் விளைவுகள் என்ன என்பதுதான் மீதி கதை.

நடிப்பு பற்றி.

சிம்புவின் நடிப்பை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை அவர் ரொமான்ஸ் ஆக்ஷன்  சுயமரியாதை காதல் கோபம் என அனைத்திலும் பட்டையை கிளப்பி விட்டார்.  ஒவ்வொரு சீனும் வேற லெவல் அந்த அளவு தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார் அதேபோல் படத்தில் ஹீரோயினாக நடித்த சித்தி இதாணி அவர்களுக்கு முதல் திரைப்படம் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் இது முதல் திரைப்படம் என்பதை யாராலும் நம்ப முடியாது அந்த அளவு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

சிம்புவின் அம்மாவாக நடித்த ராதிகா மகனைக் காப்பாற்ற போராடும் தாயை கண் முன்னே நிறுத்துகிறார் மேலும் படத்தில் நடித்த பல பிரபலங்கள் கதவுடன் ஒன்றே போகிறார்கள் அந்த அளவு சிறப்பான   நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். அதேபோல் மீண்டும் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளார் கௌதம் மேனன்.

இந்த திரைப்படத்தின் கதையை எழுதியவர் ஜெயமோகன் திரைப்படம் எதுவாக நகர்ந்தாலும் எந்த ஒரு இடத்திலும் சந்திப்பு தட்டவில்லை ஒவ்வொரு காட்சியும் செதுக்கி வைத்துள்ளார் கௌதம் மேனன் அதுமட்டுமில்லாமல் படத்தின் இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் வெறித்தனம் என்று கூறலாம். மேலும் வந்து தணிந்தது காடு பார்ட் 1 முடிந்தாலும் இனிமேல் தான் இருக்கு வெந்து தணிந்தது காடு பார்ட் 2 என அழகாக படத்தை முடித்துள்ளார்.

ஏ ஆர் ரகுமான் வெந்து தணிந்து காடு திரைப்படத்தில் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார் அதேபோல் ஒளிப்பதிவு ஹாலிவுட் லெவலில் சித்தார்த்   கலக்கிவிட்டார் மேலும் ஆண்டனியின் எடிட்டிங் பக்கா மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு பார்ட் 1 பக்கா…