வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திலிருந்து மேலும் ஒரு நடிகர் மரணம்.! அதிர்ச்சியில் திரைத்துறையினர்..

vennila kabadi kuzhu
vennila kabadi kuzhu

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகின்றது ஆனால் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளன என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் அதுமட்டும் இல்லாமலா சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது அதிலும் நல்ல கதை உள்ள திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான்  வெண்ணிலா கபடி குழு இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால்  நடித்திருந்தார் இவர் முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் என்பதால் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் மிக எளிமையாக அடைந்தார்.

இவருடன் இணைந்து அப்பு குட்டி, பரோட்டா சூரி ,விஜய் சேதுபதி என பலரும் அறிமுகமானவர்கள் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்திருந்தார் மேலும் தமிழில் இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததால் தெலுங்கிலும் இந்த திரைப்படத்தை மொழி பெயர்த்தார்கள் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதிக லாபத்தை ஈட்டியது.

இந்தத் திரைப்படத்தில் மாயி என்பவர் நடித்திருந்தார் இவர் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார் இவருக்கு கடந்த சில நாட்களாகவே மஞ்சள் காமாலை என்ற நோய் இருந்தது அதற்காக  தீவிர சிகிச்சை பெற்று வந்திருந்தார்.  இவர் மன்னார்குடியில் மஞ்சகாமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் திடீரென இன்று அதிகாலை 2.45 மணிக்கு உயிர் பிரிந்தார்.

இவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் மீண்டும் வெண்ணிலா படக்குழு நடிகர் உயிரெழுந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

vennila kabadikuzhu
vennila kabadikuzhu