வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

vennila kabadi kuzhu
vennila kabadi kuzhu

நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு பிரபல இயக்குனரான சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளது ரசிகர்களிடைய வைரளாகி வருகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நான் மகான் அல்ல, கழுகு 2, பாண்டியநாடு என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் ஹீரோவுக்கு நண்பனாகவும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரல் ஆகியது. அந்த வீடியோவில் உடல் முழுவதும் வீங்கி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இருந்தார் ஹரி வைரவன்.

மேலும் அந்த வீடியோவில் பேசிய ஹரி வைரவன் தனக்கு மருத்துவர்கள் ஆறு மாதங்கள் மட்டுமே கெடு விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார் தனக்காக தனது மனைவி ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார் அதனால் தன்னை கருணை கொலை செய்திட வேண்டும் எனக் கூறியுள்ளார் இதனைப் பார்த்த சினிமா நடிகர்கள் பலரும் அவருக்கு உதவி கரம் நீட்டினார்கள்.

என்னதான் பலர் உதவி செய்தாலும் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. அப்படி இருக்கும் நிலையில் ஹரி வைரவன் அதிகாலை 12.15 மணிக்கு திடீரென மரணம் அடைந்தார் மரணமடைந்த ஹரி வைரவனுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

வெறும் 38 வயதில் மரணமடைந்த ஹரி வைரவனுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தை இயக்கிய சுசீந்திரன் தன்னுடைய அறிவிப்பில் எங்களுடைய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த வைரவன் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது அவரை பிரிந்து வாழும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் சுசீந்திரன் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடைய வைரல் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வெண்ணிலா கபடி குழு நடிகர் இறந்துவிட்டாரா என அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள் கமெண்ட் பாக்சில்.