தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று தற்போது இணையதளத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.
அஜித் குமார் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா இந்த படம் அஜித்தின் 50வது படமாக அமைந்தது இந்த படத்தை வெங்கட்பிரபு தனக்கே உரிய பாணியில் அசத்தி இருந்தார். இந்த படத்தில் அஜித் முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
ஆனால் உண்மையில் அஜித் இதுவரை நடித்த திரைப்படங்களில் முழுக்க முழுக்க வில்லத்தனமாக நடிப்பதே கிடையாது ஆனால் மங்காத்தா படம் மட்டும்தான் முழுக்க முழுக்க அவர் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தின் சூட்டிங் எடுக்கும் போது அஜித்தை முழுவதுமாக கெட்டவனாக காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணம் அவருக்கு தோனியது.
அஜித்தை நல்லவராக காட்ட ஏதேனும் ஒரு காட்சிகள் வையுங்கள் அல்லது பிளாஷ்பேக் காட்சி ஏதாவது வையுங்கள் எனக் கூறியுள்ளார். இதனை அஜித்திடம் வந்த வெங்கட் பிரபு கூறியுள்ளார் அஜித் உடனே கோபப்பட்டு விட்டாராம் முதலில் நீ என்னிடம் கூறிய கதையை செய், வில்லனாக நடித்தால் மட்டுமே என்னால் எந்த எல்லைக்கும் சென்று நடிக்க முடியும்..
இறங்கி நடிக்க முடியும் நான் என்ன அரசியலுக்கு வரப்போகிறேன் என நல்லவனாக காட்டப் போகிறாய் எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இருக்கிறது ஆதலால் அந்த வினாயக் மகாதேவ் கதாபாத்திரம் கெட்டவனாகவே இருந்து விடட்டும் என கூறியுள்ளார்.
அஜித் சொன்ன பிறகு வெங்கட்பிரபு முழுமனதுடன் இந்த படத்தை முழுக்க முழுக்க வினாயக் மகாதேவ் கதாபாத்திரத்தை கெட்டவனாக காட்டி எடுக்கப்பட்டது படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சூப்பராக ஓடியதாக அமைத்துக்கொண்ட கூறினார்.