தமிழ்சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரை கமல் ரசிகர்கள் எச்ச பையன் வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவற்றை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறன் கொண்டவர் அதுமட்டுமில்லாமல் இவர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சினிமாவில் முதன் முதலாக சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.
இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார் அந்த வகையில் நடிகர் சிம்புவை வைத்து தற்போது மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் நேற்று வெங்கட் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் விழா என்பதன் காரணமாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் தன்னுடைய வாழ்த்தினை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்ட சகலகலா வல்லவர் வெங்கட்பிரபுவுக்கு முன்கூட்டியே என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்று பதிவிட்டிருந்தார்.
இவ்வாறு அதற்கு நன்றி கூறி உங்கள் உள்குத்து புரிஞ்சது என பதில் அளித்துள்ளார் நமது வெங்கட்பிரபு. ஏனெனில் வெங்கட்பிரபுவை போல நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மற்றொரு நடிகர் என்றால் கமலஹாசன் தான் அந்தவகையில் வெங்கட்பிரபுவை சகலகலா வல்லவன் என கூறியதன் காரணமாக கமல் ரசிகர்கள் கொந்தளித்து அவரை மிகவும் மோசமாக இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் கமல் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அனுஷ்கா, பாடகர் சீனிவாசன், கார்த்தி போன்ற பலருக்கும் வாழ்த்து கூறி உள்ளார்.
இதை பார்த்த கமல் ரசிகர்கள் என் தலைவனுக்கு மட்டும் தனியா வாழ்த்து சொல்ல முடியாத என மீண்டும் கோபமடைந்து இயக்குனர் வெங்கட் பிரபுவை இணையத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.