வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் மாநாடு இத்திரைப்படத்தை டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது படம் புரியும் வகையில் இருந்ததால் இந்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாட்கள் ஓடியது மேலும் வசூல் வேட்டையும் சிறப்பாக நடித்தியது.
இந்த படத்தை வெங்கட் பிரபு எடுப்பதற்கு முன்பாகவே பல்வேறு படங்களை இயக்கி வெற்றி கணடவர் சென்னை 600028, மங்காத்தா போன்ற சிறப்பான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக புதிய படத்தை எடுக்க ரெடி ஆகி உள்ளார்.
அந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்க இருக்கிறது இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பிரியா சுமன் போன்ற மூன்று நடிகைகள் நடித்துள்ளனர்.
மாநாடு படத்தில் பேசிய சூர்யா எ எப்படி மிரட்டினாரா அதேபோல இந்த படத்தில் வில்லனுக்கு சிறப்பான ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கவில்லை. படத்தில் வில்லனாக சந்திரன் என்பவர் நடிக்க இருக்கிறாராம் முதல் முறையாக இவர் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.
இதற்கு முன்பாக இவர் ஹீரோவாக கயல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் அத்தனையும் தாண்டி வில்லனாக சந்திரன் எஸ். ஜே. சூர்யா அளவிற்கு கதாபாத்திரத்தில் மிரட்டுவாரா என்பதே ரசிகர்களின் கேள்விக்குறியாக இருக்கிறது.