சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்தது ஆரம்பத்தில் திரும்பத் திரும்ப ஒரே காட்சிகள் வந்தாலும் இரண்டாவது பாதியில் அதற்கான காரணத்தை படக்குழு.
தெள்ளத்தெளிவாக மக்கள் மற்றும் ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியும் படத்தில் நடித்தவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்து அசத்தி உள்ளதால் படம் வேற லெவல் இருந்தது. அதிலும் குறிப்பாக சிம்பு, எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதையே சிம்புவும் செய்து சப்பியது பெரிய விஷயம். ஏனென்றால் வழக்கம்போல் அவர் பஞ்ச் டயலாக், வசனங்கள் போன்றவற்றை அதிகம் படங்களில் பேசுவார் அதை இந்த படத்தில் தவிர்த்துவிட்டு சிறப்பாக நேர்த்தியாக நடித்திருந்தார் இந்த படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்தத
படம் சிறப்பாக ஓடி இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கூடிக்கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் வெளியே வந்து விமர்சனம் கொடுத்துள்ளார். இருப்பதிலேயே மாநாடு படம் மிக மோசமான படம் என படத்தை தழுவி ஊற்றி உள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலானது நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதனைப் பார்த்த இயக்குனரும், நடிகருமான வெங்கட்பிரபு அந்த வீடியோவை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியது : விமர்சனங்கள் நல்லதாகவும், கெட்டதாகவும் வெளிவரும் அதனை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
பல விமர்சனங்களை நாம் பார்த்துள்ளோம் என அவர் கூறி உள்ளார் மேலும் பேசிய அவர் இனி அந்த ரசிகருக்கு புரிந்துகொள்ளும்படி சிறப்பான படங்களை எடுத்து கொடுப்போம் என நேர்மையான பதிலடி கொடுத்துள்ளார் வெங்கட்பிரபு இச்செய்தி மற்றும் அந்த வீடியோ இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
All criticism we have to take it in right spirit Prem!! Good or bad!! Namba paakadha criticism ah!! Adutha Padam ivarukkum pudikura maathiri puriyura maathiri try pannuvom @Premgiamaren #SpreadLove https://t.co/PQY4cCGhSz
— venkat prabhu (@vp_offl) January 16, 2022