“மாநாடு” படத்தால் செம்ம சந்தோஷத்தில் இருக்கும் வெங்கட்பிரபு – தமிழ் நாட்டை தாண்டி மற்ற இடங்களிலும் சாதனை.? இயக்குனர் வெளியிட்ட புதியசெய்தி..!

maanaadu- vengat-prabhu-
maanaadu- vengat-prabhu-

சினிமா உலகில் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக் குவிக்கின்றன அதற்குக் காரணம் அந்தப் படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும் ஏனென்றால் படம் வருமா வராதா என்பது மக்களின் என்னம்மா இருக்கும் போது அந்த தடைகளை தாண்டி வெளியே வந்து மாஸ் காட்டுகின்றனர்.

படங்கள் அந்த வகையில் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து படம் வெளிவரும்வரை பல்வேறு தடைகளையும், சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருந்தது ஏன் கடைசி கட்டத்தில் கூட படம் தள்ளிப்போனது என அறிவித்து பின் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக சொன்ன தேதியில் வெளியிட்டு அசத்தியது மாநாடு படக்குழு.

படம் வெளிவந்து தற்போது சக்கை போடு போடுகிறது என்று தான் சொல்லவேண்டும் படம் வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மிக ரசிக்கும்படி இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது மேலும் படத்தில் மற்றவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது : நான்கு நாட்களில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்தது மாநாடு படம் என கூறி உள்ளார் கேரளா மற்றும் கர்நாடகாவில் வெறும் மூன்றே நாட்களில் லாபம் ஈட்டி உள்ளது என வெங்கட்பிரபு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.