இயக்குனர் வெங்கட் பிரபு காலத்திற்கு ஏற்றவாறு வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் இதுவரை சென்னை 600028, கோவா, மங்காத்தா என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் மன்மத லீலை.
ஆனால் அதற்கு முன்பு வெளிவந்த சிம்புவின் மாநாடு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது அதுவும் இந்த காலத்திற்கு ஏற்றவாறு ஒரு டைம் லூப் படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்திருந்தது. இப்படி வித்தியாசமான படங்களை கொடுக்கக்கூடியவர் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் வெங்கட் பிரபு மற்றும் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்தின் 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் அப்பொழுது படம் வெளிவந்து விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது இதில் அஜித்துடன் கைகோர்த்து அர்ஜுன், ஆண்ட்ரியா, திரிஷா என பிரபல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் வெங்கட் பிரபுவை அழைத்து பாராட்டினாராம்..
பிறகு வெங்கட் பிரபுவிடம் அர்ஜுன் கதாபாத்திரத்தை நீங்கள் என்னிடம் சொல்லி இருந்தால் நிச்சயமாக நான் நடித்திருப்பேன் என கூறினார் மேலும் விஜய் வெங்கட் பிரபுவிடம் எனக்காக ஒரு கதை கூறுங்கள் என கேட்டிருந்தால் அதற்கு வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார் ஆனால் சில காரணங்களால் அப்பொழுது விஜய் நடிக்க முடியாமல் போனதாம்.
அந்த காலகட்டத்தில் இது போன்ற டைம் லூப் திரைப்படம் செட் ஆகாது என வெங்கட் பிரபுவும் சிந்தித்துக் கொண்டாராம் பிறகு சரியான நேரம் கிடைக்க வரும் காத்திருந்தார் ஒரு வழியாக 2021 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து மாநாடு என்ற பெயரில் இந்த டைம் டிராவல் படத்தை ரிலீஸ் செய்தாராம் படம் நல்ல வரவேற்பு பெற்று ஓடியதாக கூறப்படுகிறது.