தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் காமெடிகள் வித்தியாசமாக இருப்பதன் காரணமாக ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துவிடுகிறது.
அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கும் திரைப்படங்களில் வித்தியாசமான கதையம்சம் இருப்பது மட்டுமில்லாமல் நல்ல காமெடியும் அவர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்கிய எந்த ஒரு திரைப்படங்களும் சொல்லும்படி ஹிட்டுக் கொடுக்கவில்லை.
அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான பிரியாணி திரைப்படம் கூட எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு வெகு நாட்களுக்குப் பிறகாக சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப் பெருமளவில் வெற்றியை கொடுத்துவிட்டது.
அந்த வகையில் சிம்பு ரசிகர்களும் இந்த மாநாடு திரைப்படத்திற்கு அதிக அளவு ஆதரவளித்தது மட்டுமில்லாமல் உத்தரவை மதித்து வந்தார்கள் இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் இந்த திரைப்படமானது அடல்ட் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்க இருப்பதும் நாயகியாக ஸ்ருதி வெங்கட் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகிய இருவரும் நடிக்க உள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்து தற்போது தான் ஒரு நல்ல வெற்றி திரைப்படத்தை கொடுத்தீர்கள் அதுக்குள்ள ஏன் இப்படி திடீரென இப்படி ஒரு மாற்றம் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.