Venkat Prabhu-Sneha: நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் மட்டும் நடித்து வருவதனை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தற்பொழுது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் குழந்தைகளின் சேட்டையை மையமாக உருவாகி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஷாட் பூட் த்ரீ படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இவர்களுடைய மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேண்டும் என்று கேட்கிறார்.
எனவே இதற்காக அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசாக நாயை தருகின்றனர். இதனை சினேகாவின் மகன் தனது தம்பி போல் பார்த்துக் கொள்ளும் நிலையில் இரண்டு நண்பர்களோடு இணைந்து அட்டகாசம் செய்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென நாய் காணாமல் போக அனைவரும் பதறி அடித்து தேடுகிறார்கள்.
அதன் பிறகு யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளர்களிடம் சென்றதா? என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் நிறைவடைகிறது. ட்ரெய்லரை பார்க்கும் பொழுது இந்தப் படம் கலாட்டா, நகைச்சுவை, எதிர்பார்ப்பு என குடும்பத்தினர்களுடன் பார்க்கும் வகையில் அமைந்திருப்பது தெரிகிறது.
ஷாட் பூட் த்ரீ படத்தினை அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்க யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் என்டர்டைமெண்ட்டாக ஷாட் பூட் த்ரீ படம் அமைந்துள்ளது.