ஐயோ பாவம் சிம்பு.! இப்படி கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே.!

maanadu-tamil360newz
maanadu-tamil360newz

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் வந்தா ராஜாவாகத்தான் வருவேன். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்றுத் தரவில்லை அதனால் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வந்தது ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் திடீரென படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் படபிடிப்பு ஆரம்பிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாததால் செம கடுப்பில் இருக்கிறார் வெங்கட்பிரபு.

அதே போல் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி அதனால் பணத்தை போட்ட சுரேஷ் காமாட்சியும் மன வருத்தத்தில் இருக்கிறார், படத்தை கைவிடலாம் என படக்குழு முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் படத்தை எடுக்க ஒவ்வொரு காட்சிக்கும் குறைந்தது 100 க்கும் மேற்பட்ட ஆட்கள் தேவைப்படுவதால் மாநாடு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள், இப்படி இருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சிம்பு வெங்கட்பிரபு ஆகிய மூன்று பேரும் இணைந்து மாநாடு திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளை வைத்து குறைந்த பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை மாநாடு திரைப்படத்திற்கு முன்னதாகவே எடுத்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

இவர்களின் இந்த புதிய ஐடியா வரவேற்கத்தக்கது தான் இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் இந்த திரைப்படத்தில் யாருக்குமே சம்பளம் கிடையாதாம். சம்பளமே வாங்காமல் நடிக்க இருக்கிறார்களாம் படம் வெளியாகி வியாபார ரீதியாக வெற்றி பெற்றால் மட்டும் அதிலிருந்து பங்கு பிரித்துக் கொள்ளலாம் என பேசப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தன்னுடைய இணையதளத்தில் கூறியுள்ளார்.

எது எப்படியோ நீண்ட காலமாக சிம்பு ஏதாவது ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் இப்படி மாநாடு திரைப்படமும் டிராப் ஆனால் சிம்புவின் நிலைமை…. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே என வருத்தப்படவேண்டியதுதான்.