தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா தனக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் மேலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களான கேரளாவிலும் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவரது தந்தை நடிகர் சிவகுமாரும் மிகச்சிறந்த ஒரு நடிகர், இவரது தம்பி நடிகர் கார்த்தி, இவரது மனைவி நடிகை ஜோதிகாவும் திரைவுலகில் சிறந்தவர்களாக வலம் வருகிறார்கள்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அதிக சர்ச்சைக்கு உள்ளாகியது. அதற்கு முன்பு வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “மாஸ்” என்னும் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆவார்.
வெங்கட்பிரபு தமிழ்சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள், அதற்கு நன்றி கூறும் விதமாக வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதன் கீழ் ரசிகர் ஒருவர் “நீங்க பண்ணுனதுலியே மிக மோசமான ஒரு படம் “மாஸ்” தான் அண்ணனோட ரசிகனாக கூட எனக்கு அது பிடிக்கல” அப்படின்னு சொல்லிருக்காரு, அதற்கு விக்னேஷ் சிவன் உங்களுடைய எதிர்பார்ப்பு அடுத்த தடவை கண்டிப்பா நிறைவு செய்வேன்,ஆனால் எனக்கு “மாஸ்” படம் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தற்போது சூர்யா, பாலாவின் இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது, இந்த படத்தில் நடிகையாக சமீபத்தில் அதிகம் ட்ரெண்டான (Mamitha Baiju) நடித்து வருகிறார்.
மிகவும் இளம் வயதான இவர் தன்னுடைய அழகான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். என்னதான் ஒரு சிலரால் மாஸ் படம் விரும்ப படவில்லை என்றாலும் மாஸ் படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.