சிம்புவை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோவுக்கு வெற்றியைக் கொடுக்க ரெடியான வெங்கட் பிரபு.! படத்தை இயக்கப் போவது இல்லையாம்.. அதையும் தாண்டி.

vengat-prabhu-
vengat-prabhu-

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்,  ஹீரோவாகவும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார் இயக்குனர் வெங்கட்பிரபு சினிமாவில் பெரும்பாலும் இவர் நடித்திருந்தாலும், அவ்வபோது சத்தமே இல்லாமல் திரைப்படங்களை ஒரு பக்கம் கொடுத்து வெற்றியை குவிகின்றார்.

வெங்கட் பிரபு இதுவரை இயக்குனராக இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்து உள்ளது அந்த வகையில் சென்னை 600028 முதல் பாகம் இரண்டாம் பாகம், மங்காத்தா கடைசியாக மாநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். இருப்பினும் மாநாடு படம் வெங்கட்பிரபு கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.

காரணம் இதுவரை யாரும் எடுக்காத ஒரு படத்தை எடுத்து அசத்தி உள்ளார். இந்த திரைப்படம் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களை வியக்க வைத்துள்ளது இதனால் வெங்கட் பிரபு செம சந்தோஷத்தில் இருக்கிறார் இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு.

நடிகர் அசோக் செல்வனை வைத்து பிரமாண்டமாக ஒரு படத்தை எடுத்து வருகிறார் இது இப்படியிருக்க நடிகர் சிவகார்த்திகேயன் 20வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கியிருக்கிறார் இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறது அந்த வகையில் சிவகார்த்திகேயன் 20 வது திரைப்படத்தில் இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை மாறுதலாக இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தையே எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.