கங்கை அமரன் விட்டதை தூசு தட்டும் மகன் வெங்கட் பிரபு.. தடபுடலாக உருவாகும் பார்ட் 2 திரைப்படம்

venkat-brabu
venkat-brabu

கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்ட படம் கரகாட்டக்காரன். இந்த படம் அப்போதே 365 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஒடி சாதனை செய்தது. இந்தப் படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

மேலும் இந்த படம் வெளிவந்த போது மாபெரும் சாதனை படைத்து இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி கமல் போன்றவர்களுக்கு 80 90 காலகட்டங்களிலேயே பயத்தை காட்டியவர் ராமராஜன் ஆவார். இந்நிலையில் தற்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனை கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு அண்மைக்காலமாக அஜித் சிம்பு போன்ற டாப் நடிகர்களை வைத்து மங்காத்தா மாநாடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

அஜித் கண் அசைதால் போதும் மங்காத்தா 2 படம் உடனடியாக ரெடியாகிவிடும் இப்படி இருக்கின்ற நிலையில் தன் அப்பா இயக்கி ஹிட்டடித்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் வெங்கட் பிரபு இணைந்துள்ளார். அதன்படி இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ராமராஜன் நடித்த வேடத்தில் மிர்சி சிவா நடிக்க இருக்கிறார்.

அதோடு முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி செந்தில் கோவை சரளா போன்றவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் கரகாட்டக்காரன் முதல் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் தற்போது அதன் இரண்டாம் பாகத்திற்கு இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.