தளபதிக்கு நாமத்தை சாத்திவிட்டு வேறு ஒரு நடிகருடன் இணையும் வெங்கட் பிரபு.?

thalapathy-68
thalapathy-68

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து விஜயின் 68வது படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் விஜயின் படத்தினை தொடர்ந்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தையும் வெங்கட் பிரபு இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார் இதற்கு இடையில் விஜயின் 68வது  படத்தின் அப்டேட் வெளியான நிலையில் இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குவது உறுதி செய்யப்பட்டது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் மீதி எந்த படமும் பெரிதாக சொல்லும் அளவிற்கு சக்சஸ் ஆகவில்லை. எனவே தற்பொழுது விஜய் வைத்து வெற்றி திரைப்படத்தை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வரும் நிலையில் லியோ படம் ரிலீஸ் ஆனவுடன் தளபதி 68 ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் வெங்கட் பிரபு சமீப காலங்களாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை அடிக்கடி சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. கஸ்டடி படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே கிச்சா சுதீப்பை சந்தித்தாராம் வெங்கட் பிரபு. அப்பொழுது இருவரின் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தளபதி 68 படத்தில் கமிட் ஆனதால் கிச்சா சுதீப் ப்ராஜெக்ட் தள்ளி போகும் என தகவல் வெளியானது.

ஆனால் தளபதி 68 தொடங்கும் முன்பே கிச்சா சுதீப் படத்தை தொடங்க வெங்கட் பிரபு பிளான் செய்திருக்கிறார் என கூறப்பட்ட நிலையில் ஆனால் அது உண்மை இல்லை என்றும் தளபதி 68 முடிந்த பிறகு தான் கிச்சா சுதீப் நடிக்க இருக்கும் படத்தினை வெங்கட் பிரபு  இயக்கம் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.