சிம்புவை தொடர்ந்து மிகப்பெரிய ஒரு நடிகருக்கு கதை சொல்லி அசத்தி உள்ள வெங்கட் பிரபு.? மன்மதலீலை படத்துக்கு பிறகு அவருடன் தான் போல..

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார். இரண்டிலுமே தனது திறமையை அழகாக வெளிகாட்டும் கொண்டு வருவதால் பட வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகர் சிம்புவுடன் கைகோர்த்து  மாநாடு படத்தை கொடுத்து அசத்தி இருந்தார்.

இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு பேரையும், புகழையும் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவுக்கு பெற்று தந்தது. மேலும் திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை செய்து அசத்தியது. மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு அசோக் செல்வனை வைத்து மன்மதலீலை என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

அதனை தொடர்ந்து நடிகர்களுக்கு கதை சொல்லியுள்ளார் வெங்கட்பிரபு அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனுக்கும் ஒரு கதையை சொல்லி உள்ளார் அந்த கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே ஒப்பந்தமாகி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகிறது.

ஆனால் இப்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் கையில் நான்கைந்து திரைப்படங்கள் இருக்கின்றன அந்த வகையில் டான், அயாலன், சிங்க பாதை மற்றும் தெலுங்கில் ஒரு படமும் பண்ண இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்கள் இருக்கின்றன இருந்தாலும் கதையம்சம் சிறப்பாக இருந்து உள்ளதால் வெங்கட்பிரபுவை நழுவ விடக்கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயன் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த படங்களை முடித்துவிட்டு.

அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் வெங்கட் பிரபுவும் மன்மத லீலை படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் படத்தில் வேலைகளை செய்வார் என பார்க்கப்படுகிறது.எது எப்படியோ சிவகார்த்திகேயனும், வெங்கட்பிரபுவும் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.