தமிழ் சினிமாவில் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பிரபல பாடகர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தன்னுடைய தந்தைக்கு தகுந்தாற்போல இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு இயக்குனர் மட்டுமின்றி, திரைக்கதை ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அந்த வகையில் தமிழ் திரை உலகில் இவர் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தற்சமயம் சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் பல்வேறு சினிமா துறை நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் வெங்கட்பிரபுவின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்களும் வெங்கட் பிரபுவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்த புகைப்படத்தில் தொகுப்பாளினி டிடி வெங்கட் பிரபுவுடன் மிக நெருக்கமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் சினிமா உலகில் இவை அனைத்தும் சகஜம் தான் என கூறி மனசை தேற்றிக் கொள்ள தான் வேண்டும்.
இதோ வெங்கட்பிரபுவின் பிறந்தநாள் புகைப்படம்.