20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை.? ஆஹா இவங்க நடிப்பு ராட்சசியாச்சே

Thalapathy 68
Thalapathy 68

Thalapathy 68 : தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கதாநாயகியாக ஜோதிகாவை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க நடிகை ஜோதிகாவை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா 20 வருடங்களுக்கு முன்பு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கினார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படம் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது தளபதி விஜய் அடுத்ததாக யாரு இயக்கத்தில் யார் தயாரிப்பில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பட குழு அணுகியுள்ளது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் முதலில் ஜோதிகா விஜயின் காட்சிகளை அக்டோபர் மற்றும் நவம்பர் 2023-ல் எடுத்து விடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு ஜோதிகா விஜயுடன் குஷி மற்றும் திருமலை ஆகிய  திரைப்படங்களில் நடித்துள்ளார். மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைய இருக்கிறார்கள் என கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தகவல் வெளியானது அது மட்டும் இல்லாமல் அரசியல் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காது எனவும் சமீபத்தில் வெங்கட் பிரபு தெரிவித்தார் தற்பொழுது தளபதி 68 திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அக்டோபரில் லியோ படம் வெளியான பிறகு டைட்டில் அறிவிப்பு பரபரப்பாக வெளியிடப்படும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

விஜய் தற்போது லொகேஷன் இயக்கத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் வெளியிட்டிற்காக படக்குழு அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன்,  மன்சூர் அலிகான் மிஷ்கின், மேத்யூ தாமஸ், சாண்டி, கௌதம் வாசுதேவ் மேனன் என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

அதேபோல் அனுராக் கஷ்யப் சிறப்பு ரோலில் நடித்துள்ளார் அனிருத் தான் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

jyothika
jyothika