கை கால் வராத வெங்கல் ராவுக்கு ஒரு லட்சத்தை தூக்கி கொடுத்த வடிவேலு.. அப்போ அதெல்லாம் கதையா..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வந்த வடிவேலு பற்றி பல நடிகர் நடிகைகள் குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள் அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார் என பலரும் கூறி நாம் கேட்டுள்ளோம் ஆனால் அதற்கு எதிர் மாறாக தற்பொழுது வடிவேலு செய்துள்ள விஷயம் பூதகரமாக வெடித்துள்ளது.

நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தார் வெங்கல் ராவ் ஆனால் தற்பொழுது இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் கை கால் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பணம் இல்லாமல் திடீரென ஒரு வீடியோ பதிவை வெங்கட்ராவ் வெளியிட்டார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது அப்பொழுது அதனை பார்த்த சிம்பு 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார்.

அவரை தொடர்ந்து கே பி ஒய் பாலா ஒரு லட்ச ரூபாயும், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார். இவர்களை தொடர்ந்து தற்பொழுது நடிகர் வடிவேலு ஒரு லட்ச ரூபாய் வெங்கல் ரவுக்கு அனுப்பி வைத்து தன் மீது இருந்த கரையை துடைக்க ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே வடிவேலு பற்றி பல நடிகர்கள் நடிகைகள் தன்னுடன் நடித்த நடிகர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்து வந்தார் இப்படி பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்பொழுது வடிவேலு வெங்கள் ராவுக்கு உதவி செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் போனில் தொடர்பு கொண்ட வடிவேல் அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசி உள்ளாராம்.