சென்னை ஏரியாவில் வெந்து தணிந்தது காடு படம் – முதல் நாளில்அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

simbu
simbu

நடிகர் சிம்பு அண்மைக்காலமாக தனக்கே கூறிய ஸ்டைல் மற்றும் பஞ்ச் டயலாக் போன்றவற்றை  ஒதுக்கி வைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திலும் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்துள்ளார்.

படமும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் இயக்கினார் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்தார் ஐசரி கணேஷ் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார். இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், kayadu lohar, neeraj madhav, siddhi idnani மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு கிராமத்து பையனாக இருந்து மும்பை பக்கம் போய் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் ஆக உருவாகுவது தான் கதை. சிம்பு இந்த படத்தில் சின்ன பையனாக நடிக்க 22 கிலோ உடல் எடையை குறைத்து சூப்பராக நடித்திருந்தார் இது இந்த படத்திற்கு பிளஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதன்.

காரணமாக வசூலிலும் அடித்து நொறுக்குகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் உலக அளவில் கிட்டதட்ட 15 கோடி வசூலித்திற்கும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே 10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் முதல் நாளில் 95 லட்சம் வசூலித்து உள்ளதாம். வருகின்ற நாட்களில் அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வசூலை அள்ளி அசத்தும் என்பது பட குழுவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.