சிம்புவின் வெந்து தணிந்தது காடு இந்த விஜய் திரைப்படத்தின் அட்ட காப்பியா.! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்…

vijay-simbu

நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விஜய் நடிப்பில் 23 வருடங்களுக்கு முன்பே வெளியாக்கிய திரைப்படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக கௌதம்மேனன்  இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார் கிட்டத்தட்ட 20 வயது இளைஞன் போல் தோற்றமும் கொடுத்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக சித்தி  இத்னானி  நடித்துள்ளார் அவருக்கு இதுதான் முதல் திரைப்படம்.

சிம்பு இந்த திரைப்படத்திற்காக பதினைந்து கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏ ஆர் ரகுமான் இசையில் பேக்ரவுண்ட் மியூசிக் பட்டைய கிளப்பி உள்ளார் சித்தார்த் ஒலி பதிவு செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளைஞர் மும்பைக்கு சென்று அங்கு எப்படி டான் ஆக மாறுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை. சிம்புவின் தாயாராக ராதிகா நடித்துள்ளார்.

வழக்கமாக கௌதம் மேனன் காதல் கலந்த திரைப்படத்தை தான் எடுப்பார் ஆனால்  இந்த திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமாக வழக்கத்திற்கு மாறாக எடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது அதிலும் குறிப்பாக சிம்புவின் நடிப்பை பார்த்து பிரமாதம் என பல பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் கதை ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே திரைப்படத்தின் காப்பி என பல நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இரண்டு திரைப்படத்தின் கதைகளும் ஒன்று தான் எனவும் நெஞ்சினிலே திரைப்படத்தை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கியிருந்தார் என்றும் விஜய்க்கு ஜோடியாக இந்தி நடிகை இஷா கோபிகர் நடித்திருந்தார் இந்த நிலையில் இரண்டு திரைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

vethu thaninthathu kaadu
vethu thaninthathu kaadu