ரோஹித்தை கண்காணித்த வெண்பா மற்றும் சாந்தி – கண்ணில் மண்ணைத் தூவி எஸ்கேப்.! பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்.

bharathi-kannamma-
bharathi-kannamma-

விஜய் டிவியில் கடந்த 800 எபிசோடுகளுக்கு மேலாக இன்றும் டிஆர்பி யில் டாப்பில் இருந்து வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஆனால் தற்போது கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோடில் வெண்பாவின் அம்மா ஷர்மிளா வெண்பாவிற்காக ரோகித் என்ற மாப்பிள்ளை பார்த்து வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

ஆனால் அவன் நல்லவன் இல்லை என வெண்பாவிற்கு சந்தேகம் இருக்கிறது இருந்தாலும் அம்மாவிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்பதற்காக ரோஹித்தை ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடித்து கொடுக்க வேண்டும் என வெண்பா கண்காணித்து வருகிறார்

இந்த நிலையில் ரோகித் அம்மாவிடம் ஐந்து லட்சம் பணம் வாங்கிய விஷயம் வெண்பாவுக்கு தெரிய வந்துள்ளது. அதனால் ரோஹித் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே செல்லும்போது வெண்பாவும் வேலைக்காரி சாந்தியும் ரோகித் மேல் சந்தேகம் வந்து ரோகித் எங்கு செல்கிறார் என பார்ப்பதற்காக பின்தொடர்ந்து செல்கின்றனர்.

வெண்பா மற்றும் சாந்தி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது வெண்பாவிற்கு ஃபோன் வருவதால் அந்த போனை பேசிக்கொண்டே ரோஹித் காரை பின்தொடர்வதை தவிர விட்டுள்ளார். கார் எந்த பக்கம் போனது என தெரியாமல் வெண்பா மற்றும் சாந்தி இருவரும் குழம்பி வருகின்றனர்

ஆனால் ரோகித் அவனது நண்பனை சந்தித்து பேசி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சௌந்தர்யா தனது பேராசிரியரை மருத்துவமனையில் சென்று பார்க்க வந்துள்ளார் அப்போது லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் வர ஹேமாவை பாரதியின் மகள் என அறிமுகப்படுத்தி வைக்கிறார் சௌந்தர்யா.

லட்சுமியை யார் எனக் கேட்பதற்கு ஒன்றும் சொல்லாமல் தயங்கிய நிலையில் பின்பு கண்ணம்மா எனது மகள் என அறிமுகப்படுத்தி வைக்கிறார். இதோடு பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.