தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஆர்யா இவர் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்ட பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் நடித்த வேம்புலி என்ற கதாபாத்திரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வேம்புலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜான் கோகென். இவரை பற்றி தற்போது தான் நமக்கு தெரிந்திருந்தாலும் இவருடைய மனைவி சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இதுமட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே அவரை நன்றாக தெரியும்.
வேம்புலியின் மனைவி பூஜா ரமசந்திரன் முதன் முதலாக வீடியோ ஜாக்கியாக தான் சின்ன திரையில் அறிமுகமானார் அதன் பிறகு தன்னுடைய சிறந்த திறமையை வெளிக்காட்டி மாடலிங் துறையை தேர்ந்தெடுத்த நமது நடிகை பின்னர் திரையில் கதாநாயகியாகவும் வளர ஆரம்பித்து விட்டார்.
என்னதான் இவர் முட்டி மோதினாலும் இதுவரை முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை அந்த வகையில் பீட்சா களம் காதலில் சொதப்புவது எப்படி காஞ்சனா இரண்டாம் பாகம் என பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் கணவர் ஜான் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கொண்டிருந்தார் அப்போது அவருக்கு ஒரு வரப் பிரசாதம் போல் அமைந்தது தான் சார்பட்டா பரம்பரை திரைப்படம் இந்த திரைப்படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக் காட்டி தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.
இந்நிலையில் வேம்புலி தன்னுடைய மனைவியுடன் மிக நெருக்கமாக போட்டோ ஷூட் எடுத்தது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.