தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம்தான் வேலையில்லா பட்டதாரி இத்திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி சரண்யா மோகன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அந்த ஆண்டில் வெற்றி திரைப்பட லிஸ்டில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் ஆனது முன்னிலை வகித்தது.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் வெறும் ஆறு கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படமாகும் என்னதான் குறைந்த பட்ஜெட்டில் எடுத்த திரைப்படமாக இருந்தாலும் இந்த திரைப்படத்தின் வசூல் ஆனது பல கோடிகளை பெற்றுவிட்டது.
இந்நிலையில் சீரியல் நடிகர் விக்னேஷ் கார்த்திக்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து ஒரு போன் வந்து இருந்தது அப்பொழுது உங்களுக்கு நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நமது நடிகர் என்ன ப்ரோ இப்படி கேட்டுடீங்க நிச்சயமா நான் பண்றேன் என கூறியிருந்தார்.
அதாவது தனுஷ் சாரோட தம்பி கேரக்டரில் நடிப்பதற்காக கேட்டிருந்தாங்க உடனே சாயங்காலம் ஆடிஷனுக்கு ஆபீஸ்க்கு வர சொன்னாங்க ஆனா நான் வேற ஷோ ஒன்றில் கமிட்டாகி இருந்தேன் அதனால அன்னைக்கு ஈவினிங் என்னால போக முடியல அடுத்த நாள் போனான் ஆனா வேற ஒரு ஆள் கமிட் ஆயிட்டார் என்று சொன்னாங்க.
இந்நிலையில் விஐபி திரைப்படத்தை எப்போது பார்த்தாலும் தனுஷ் சாருக்கு தம்பியாக நடிக்க முடியாமல் போய்விட்டது என வருத்தப்படுவேன் என விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.