வேலன் படத்தில் ப்ரிகிதா சகாவின் கதாபாத்திரம் இதுதான்.! இதோ போஸ்டர்

velan 1
velan 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்ட பலருக்கும் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாகவும், கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது வருகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் போட்டியாளராக வெற்றி பெற்றவர்தான் நடிகர் முகேன் ராவ். இதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் மலேசியா,  சிங்கப்பூர் போன்ற இன்னும் பல நாடுகளின் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

முதலில் இவர் ஆல்பம் சாங் பாடல்களை இயக்குவது அதில் நடனமாடுவது போன்றவற்றை செய்து வந்தார் இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பிறகு முகேன் ராவ் நடித்து வரும் முதல் படம் வேலன். இத்திரைப்படத்தில் சூரி, பிரபு,தம்பி ராமையா,  ஹரிஷ் பேராடி, பில்லி முரளி,  லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்டவர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தின் முகேன் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் பையனையும் மலையாளி பெண்ணையும் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இத் திரைப்படத்தில் உள்ள அனைவருக்கும் லுக் போஸ்டர் வெளியாகி விட்டது.

velan 2
velan 2

இதனைத் தொடர்ந்து யூடியூப் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் பிரிகிதா சகாவின். இவரும் வேலன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.அந்த வகையில் இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்  வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

pavithra 3
pavithra 3