Vela ramamoorthy : சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்தவர் மாரிமுத்து இவர் படிப்படியாக வளர்ந்து இப்பொழுதுதான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பட வாய்ப்பு அள்ளினார் அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இது தவிர சின்ன படங்கள் சிலவற்றிலும் கவனம் செலுத்தினார். வெள்ளி திரையில் தாண்டி சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த சீரியலை உச்சத்தில் தூக்கி நிப்பாட்டினார்.
இப்படிப்பட்ட மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தார். அவருடைய இரைப்பை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர்கள் இன்றும் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு அழுது வருகின்றனர் இந்த சூழலில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராம மூர்த்தி நடிக்க உள்ளாராம்..
இந்த நிலையில் வேலராம மூர்த்தி பேட்டி ஒன்றில் மாரிமுத்து குறித்து பேசி உள்ளார். அவர் என் கைக்கு அருகில் இருந்தவர் நாங்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் அண்ணன் தம்பி நடித்து வந்தோம்.. சூட்டிங் முடிந்து விட்டு நானும் அவரும் காரில் சென்றோம் ஹோட்டலுக்கு வந்ததும் அவர் சென்னைக்கு சொல்வதாக கூறி கிளம்பிவிட்டார் அவரை நான் அப்பொழுது சரியாக பார்க்வில்லை..
இரண்டு நாட்கள் கழித்து அவர் இறந்து விட்டதாக கூறியது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் ஒரு திறமையான நடிகர் அவர் படபிடிப்பு தளத்தில் எவ்வளவு எவ்வளவு சிரிக்கிறாரோ அதே அளவுக்கு கோபமும் படக்கூடியவர் ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் சினிமாவைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆரம்பத்திலிருந்து சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர் இப்பொழுது அவர் இல்லாதது ரொம்ப வருத்தமாக இருப்பதாக வேலராமமூர்த்தி பேசியுள்ளார்.